பணம் தடையின்றி வந்து சேர...
பணம் தடையின்றி வந்து சேர, வந்த பணம் வீண்விரயம் ஆகாமல் பல மடங்கு பெருகிக் கொண்டே செல்லவும் பல தாந்திரீக முறைகள் உள்ளது. அவற்றில் சில...
பணம் நம் வீட்டில் எங்கு வைத்தாலும் சரி அதன் அருகில் பணத்தை ஈர்க்கக் கூடிய பொருள்களை கட்டாயமாக வைக்க வேண்டும். குறிப்பாக ஏலக்காய், பச்சை கற்பூரம், கிராம்பு, மல்லிகைப்பூ, அரகஜா, புனுகு, கோரோசனை, கருங்காலிக் கட்டை, கருங்காலி மாலை போன்ற எப்போதும் பணத்தின் அருகில் இருப்பது நல்லது.
கோவில்களில் பிரசாதமாக தரப்படும் வில்வ இலை, துலசி இலை, போன்றவற்றை, பணத்துடன் சேர்த்து வைக்கவும். இந்த இலை காய்ந்தவுடன், மாற்றி விடவேண்டும்.
பணம், நகை இரண்டையும், மஞ்சள் அல்லது பச்சை நிற துணியில் வைத்து, எடுக்க பழகுங்கள். அது மட்டும் இன்றி பணத்திற்கு அதிபதியான, மகாலட்சுமி தாயார், பெருமாள், குபேரர், போன்றவருடைய படங்களை, பணம் இருக்கும் இடத்தில் வைக்க வேண்டும்.
Comments
Post a Comment